காடூர் படைகாத்தவர் ஆலய - வரலாறு
கி. பி 1325 - 1351 கட்டப்பட்ட ஆலயம்; located at Perambalur, Tamil Nadu, INDIA.


தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் அழகிய காடை மாநகர் என்னும் காடூர் அருள்மிகு படைகாத்தவர் சுவாமி ஆலய வரலாறு.

அதாவது இந்தியாவை துலுக்கர்கள் அரசாண்டகாலத்தில் (கி. பி 1325 முதல் 1351 வரை முகமது பின் துக்ளக் ஆண்டுவந்தார்). அப்பொழுது அவர்களுடைய ஆதிக்கம் தமிழ்நாட்டில் மதுரைவரை இருந்தது. அதாவது முஸ்லிம் ஆட்சி வடக்கே Peshawar , தெற்கே மதுரை , மேற்கே சிந்து மேலும் கிழக்கே அஸ்ஸாம் வரை பரவி இருந்தது. அந்த காலத்தில் தான் அவர்கள் நாடெல்லாம் கொலைகளவு செய்யலானார்.

அவ்வாறே காடூர் கிராமத்தில் குதிரைமீது ஏறி தீவிட்டிகளுடன் வந்து கொலைகளவு செய்யலானார். மிறாட்டியர்ககள் அனைவரையும் முடுகவே , ஊர்மக்கள் அனைவரும் பயந்து ஆபத்து வந்து விட்டது என்று அருள்மிகு படைகாத்தவர் ஆலயத்தில் ஓடி வந்து அய்யனே ! எங்கலுக்கு ஆபத்து வந்துவிட்டது. காப்பாற்று அய்யனே என்றவரே அய்யனின் திருவடிகளை பற்றினர்.

தீவிட்டி கொள்ளைக்காரார்களும் குதிரைமீது ஏறியபடியே பின் தொடர்ந்து வந்தனர். ஆலயத்தின் உள்ளே குதிரை மீதுஎறி படியே நுழைந்து மிரட்டினார்கள். அப்பொழுது அருள் மிகு படைகாத்தவர் சுவாமி நம்முடைய காவலில் உள்ள மக்களிடம் வரக்காரணம் என்னே என்றுஅவர்கள் அனைவரையும் கண் திஷ்டி மறையவைத்தார். தீவிட்டி கொள்ளைக்காரார்களும் குதிரையை விட்டுகீழே இறங்கி தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து மன்னித்து அருளுமாறு சுவாமியை மன்றாடினார்.

அவர்கள் சுவாமிக்கு பூஜைகள் செய்து காணிக்கையாக ஏழு குதிரைகள் செய்து வைப்பதாக வேண்டினார்கள். அதன் பின் கோவில் பூசாரியார் சுவாமிக்கு தீபாராதனை செய்து அவர்களுக்கு விபுதிபிரசாதம் வழங்கினார். உடனே அவர்கள் அனைவருக்கும் கண் தெரிய வைத்தார். படையை காத்ததினால் அருள்மிகு அய்யனார் சுவாமி அன்று முதல் படைகாத்த சுவாமி என்று அழைக்கபாடலனார்.

அவர்கள் வேண்டியபடியே சுவாமிக்கு பூஜை செய்து ஏழு குதிரைகளையும் செய்து வைத்தார்கள்.